Bread of Life Church India

கொடுத்தலின் ஆசீர்வாதம்

யாரும் சொல்லிக்கொடுக்காமல் தேவனுக்கு முதன்மையானதையும், முக்கியமானதையும் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொடுத்த ஆபேல் தேவனால் சாட்சி பெற்றான்.

வரமாக பெற்ற ஒரே மகனை எந்த கேள்வியும் கேட்காமல் தேவனுக்கு கொடுக்க தயாரான ஆபிரகாம் வானத்து நட்சத்திரங்களை போலவும், கடற்கரை மணலைப்போலவும் சந்ததிகளை பெற்றான்.

கர்த்தர் தான் கர்ப்பத்தை அடைத்து வைத்துள்ளார் என்பதை அறியாமல் தனக்கொரு பிள்ளையை கொடுத்தால் அதை தேவனுக்கே கொடுப்பேன் என்று சொல்லில் மட்டுமல்ல , சொன்னபடி தேவன் கொடுத்த தும் தேவனுக்கே கொடுத்த அன்னாள் மேலும்  ஐந்து பிள்ளைகளை பெற்றுக் கொண்டாள்.

தனக்கும் மகனுக்கும் வாழ்வதற்கு உணவில்லை இருப்பதை உண்டு சாகலாம் என்று முடிவெடுத்த நிலையில் தேவ மனிதன் இருப்பதில்  முதலில் எனக்கு கொடு என்று கேட்டதும் இருப்பதையும் தேவனுக்கு கொடுத்த சாறிபாத் விதவை தேசமே பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட போதும், பஞ்ச காலம் முழுவதும் பசி இல்லாமல் பசுமையாக வாழ்ந்து, வியாதி பட்டு இறந்த மகனையும் அற்புதமாக திரும்ப பெற்றுக் கொண்டாள்.

ஐசுவரியவான்கள் எல்லாம் தங்கள் பரிபூரணத்தில் இருந்து கொடுத்த போது, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேவனுக்கு கொடுத்த ஏழை விதவை இயேசு கிறிஸ்துவினால் கூர்ந்து  கவனிக்கப்பட்டு, பாராட்டுப்பெற்றாள்.


கேட்டுப்பார் தேவனின் அன்பு தெரியும்

கொடுத்துப்பார் நீ தேவன் மேல் வைத்துள்ள அன்பு வெளிப்படும்

நீங்கள் கர்த்தருக்காக கொடுத்தவைகள் கணக்கில் உண்டு. மிகுதியாக உங்களுக்கு கொடுத்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

*சாட்சியாக மாற்றுவார்*