Bread of Life Church India

காயீன் மனைவி யார்?





வேதாகமத்தை வாசிக்கும் போது கேள்விகள் வராமல் இருந்தால்தான் தவறு. கேள்விகள் வருவது நல்லது. ஆனால் அந்த கேள்விகள், விடையை தேடி விசுவாசத்தில் வளர்வதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.  விசுவாச வாழ்வில் இருந்து தவறி விழுவதற்கு ஏதுவாகவும், முரண்பட்ட கருத்துக்களை கூறி, குழப்புவதற்கு காரணமாக இருந்து விடக்கூடாது.
ஆதியாகம புத்தகத்தை வாசிக்கும் போது, “காயீனின் மனைவி எங்கிருந்து வந்தாள்என்ற கேள்வி வராமல் இருக்காது. ஏனென்றால் ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரத்தில் ஆதாம் ஏவாள் இருவர் மட்டுமே இருக்கின்றனர். 4ம் அதிகாரத்தில் 1,2 வசனங்களில் இவர்களுக்கு காயீன், ஆபேல் என்னும் இரண்டு பிள்ளைகள் பிறந்ததாக குறிப்பிடும் வேதம் 4ம் அதிகாரம் 17ம் வசனத்தில் காயீன் தன் மனைவியை அறிந்தான் என்று கூறுகிறது.  அந்த சமயத்தில் ஆதாம், ஏவாள், காயீன் மட்டுமே இருப்பதை போல நாம் வேகமாக வாசித்துக்கொண்டு செல்லும் போது தெரிகிறது. எனவேதான் காயீனுக்கு மனைவி எங்கிருந்து வந்தாள் என்ற கேள்வி எழுவது இயற்கையே.
அதே வேளையில் வேதாகமத்தை வேகமாக வாசித்துக்கொண்டே செல்லாமல் நிதானமாக தியானித்தும் பார்க்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி நாம் நிதானமாக தியானிக்கும் போது 4ம் அதிகாரம் 14ம் வசனத்தில்என்னைக் கண்டுபிடிக்கின்ற எவனும் என்னைக் கொன்று போடுவான்என்று காயீன் கூறுவதிலிருந்து, அப்பொழுதே மற்ற மனிதர்களும் அவர்களோடு இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதை அறிந்து கொண்டால் காயீன் மனைவி யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

எல்லாம் நன்மைக்கே...



கடந்த சில ஆண்டுகளுக்குமுன் இயேசு கிறிஸ்துவை அறியாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வாலிப சகோதரனுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
சுவிசேஷத்தை ஆரம்பத்தில் அசட்டை செய்த அந்த வாலிபர் நாட்கள் செல்ல செல்ல சுவிசேஷத்தினால் ஈர்க்கப்பட்டு, இயேசுவே உண்மையான கடவுள் என்பதை அறிந்து கொண்டார்.
சுவிசேஷ கூட்டங்களில் கலந்து கொண்டார், சபையின் ஆராதனை ஐக்கியத்திலும் பங்கு பெற்று வந்தார். அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டதின் நிமித்தமாக குடும்பத்தில் பலவிதமான எதிர்ப்புக்களையும் சந்தித்தார்.
இருப்பினும் இயேசுவே உண்மையான கடவுள் என்பது உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டதால் எந்த எதிர்ப்புக்களும் ஒன்றும் செய்திட முடிய வில்லை. வந்த எதிர்ப்புக்கள் வாலிபர் விசுவாசத்தில் மேலும் வளர்வதற்கு உதவியாகவும், இயேசு கிறிஸ்துவை இன்னும் உறுதியாக பற்றிக்கொள்ளவும் செய்தன.
நாட்கள் சென்றன. வாலிபர் தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்தார்.  படித்த படிப்புக்கான வேலைக்காக காத்திருந்தார். ஜெபித்தார். பல மாதங்கள் உருண்டோடின, ஆனால் வேலை கிடைக்க வில்லை. மிகவும் சோர்ந்து போன நிலையில் கர்த்தரை நம்பி வந்திருக்கிற எனக்கு கர்த்தர் ஒரு நல்ல வேலையை கொடுக்க கூடாதா? என்று சபையின் போதகரிடத்தில் கேட்பார்.
கர்த்தர் நிச்சயமாக நல்ல வேலையை உங்களுக்கு தருவார். சகோதரனே, கர்த்தரை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது’’ என்று சபையின் போதகரும் வாலிபருக்கு கர்த்தரின் வார்த்தைகளை சொல்லி, ஜெபித்து, “கர்த்தருக்காக காத்திருங்கள். கர்த்தர் உங்களுக்கு நிச்சயமாக அற்புதங்களை செய்வார்’’ என்று விசுவாசத்தில் பெலப்படுத்தி நடத்துவார்.
நாட்கள் செல்ல செல்ல வாலிபரின் இரட்சிக்கப்படாத குடும்பத்தினர் வாலிபரை மிகவும் நெருக்க ஆரம்பித்தனர். “எந்த ஒரு வேலைக்கும் போகாமல் இப்படி இயேசு, இயேசு என்று சுற்றிக்கொண்டிருக்கிறாயே, இதனால்தான் உனக்கு வேலை கூட கிடைக்க வில்லை’’ என்று பேசுவது நாளுக்கு நாள் அதிகமாக பதில் பேச முடியாமல் வாலிபர் தனிமையில் கண்ணீருடன் ஜெபிக்க ஆரம்பித்தார்.

நேரம் நல்ல நேரம்


“அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;’’ (பிரசங்கி 3:11).
நேரங்களை பயன்படுத்துவதில் அநேகர் குறையுள்ளவர்களாகவே இருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் சரியாக செயல்படுவதில் வேகம் காட்டுவதை விட  அந்த நேரத்தை அலட்சியப்படுத்துவது நம்முடைய சுபாவமாகவே இருப்பது தான் வேதனை.
காலத்தையும் நேரத்தையும் படைத்த தேவன் நேரத்தில் கவனமுள்ளவராகவே இருக்கிறார். எல்லாவற்றையும் அதினதின் நேரத்தில் மிகவும் சரியாக செய்கிறவர், அதே வேளையில் அந்த நேரத்தை தன்னுடைய பிள்ளைகளும் சரியாக மதித்து செயல்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்.
மனிதர்கள் நல்ல நேரம் என்றும், கெட்ட நேரம் என்றும் மணித்துளிகளை பிரித்து விட்டு, செயல்பட வேண்டிய நேரத்தில் இது கெட்ட நேரம் என்று செயல்படாமல் இருந்து கொண்டு, என்னுடைய வாழ்வில் உயர்வே இல்லை எனக்கு நேரமே சரியில்லை என்று காலத்தின் மீதும், நேரத்தின் மீதும் பழி சுமத்திக்கொண்டிருப்பவர்கள். நான் தான்  நேரத்தை சரியாக பயன்படுத்த வில்லை என்ற குற்றமே தெரியாமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.

கைவிடாத கர்த்தர்



    சில ஆண்டுகளுக்கு முன் சுவிசேஷம் அறியாத இடத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக தேவனுடைய அழைப்பின்படி, தேவ ஊழியர் ஒருவர் தனது குடும்பத்துடன் சென்றார்.
குடிசை வீட்டில் தங்கி பொருளாதார நெருக்கடியின் மத்தியில் தேவனுடைய வார்த்தையை அறிவித்து, தனக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை செய்து வந்தார்.
இவ்வேளையில் சாப்பிட எதுவும் இல்லாமல் குடும்பத்துடன் மிகவும் கஷ்டப்பட்டு வந்தும், ஒருவரிடமும் தனது தேவையை குறித்து சொல்லாமல் ஊழியத்தை செய்தார்.
மதிய வேளை இரண்டு தினமாக சாப்பிடாமல் பசி மிகவும் வாட்ட குடும்பத்துடன் அமர்ந்து, கர்த்தரை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தார்கள். “மனிதர்களிடம் சென்று எங்கள் தேவைகளை சொல்ல முடியாது, நீங்கள் தான் எங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்’’ என்று ஜெபித்தார்கள்.
அவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிற அந்த வேளையில் வீட்டின் கூரைகளின் ஓட்டைகள் வழியாக பொட்டலங்கள் அவர்கள் இருந்த இடத்தில் விழுந்தது.

உனக்குள்ளதை வெளிப்படுத்து..

கல்லூரி ஆண்டு விழா துவங்குவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்தன.  மாணவர்கள் எல்லோரும் மிகுந்த உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்க, மனதில் படபடப்புடன் தான் எழுதிவைத்திருந்த கட்டுரையை மறுபடியும் வாசித்து பார்த்து “நன்றாக எழுதி இருக்கிறேனா? இல்லை இதை நான் வாசிக்கும் போது மற்றவர்கள் என்னைப்பார்த்து கிண்டல் செய்து சிரிப்பார்களா?’’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே மனதிற்குள் கலவரம் மேலோங்க கரங்களில் இருக்கும் விரல்களை மடக்கி சொடுக்கிக்கொண்டிருந்தான் ஜான்.
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தனித்திறமைகளை காண்பிக்க வேண்டும் என்று கல்லூரி பேராசிரியர் சொல்லி இருந்ததால் தன்னால் முடிந்த அளவு கட்டுரையை சொந்தமாக தயார் செய்து வைத்திருந்தான்.
விழா ஆரம்பம் ஆனது ஒவ்வொருவரும் தங்களின் திறமைகளை காண்பித்துக்கொண்டிருந்தனர். கரவொலி அரங்கத்தை அதிரப்பண்ணியது. இதைப்பார்த்துக்கொண்டிருக்கையில் தன்னுடைய கரத்தில் இருக்கும் பேப்பரை மறுபடியும் விரித்துப்பார்த்து விட்டு, தன்னைத்தானே நொந்து கொண்டவனாய், அவனுக்கே அவன் மேல் வெறுப்பு இன்னும் அதிகமானது.

மாற்றத்தின் மறுபக்கம்

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான இணைய தள ஜீவ அப்பம் குடும்ப அங்கத்தினர்களுக்கு, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டில்  மூன்றாம் மாதத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
ஒருசில  காரணங்களால், கடந்த சில மாதங்களாக நமது ஜீவ அப்பம் மாத இதழ் வெளிவரவில்லை,  இணையத்திலும் செய்திகளை வெளியிட முடியவில்லை. அநேகர் விசாரித்தீர்கள், ஜெபித்தீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இந்த ஆண்டில் தொடர்ந்து நமது ஜீவ அப்பம் வெளியிட தேவன் நமக்கு உதவி செய்வாராக.
கடந்த ஆண்டு, தேவ கிருபையால் தேவனுடைய ஊழியத்தை செய்ய கர்த்தர் நமக்கு உதவி செய்தார்.  தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
தேவ பிள்ளைகளாகிய நம்முடைய ஒவ்வொருவருடைய செயல்களும், முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றே கர்த்தர் எதிர்பார்க்கிறார். தேவனோடு ஐக்கியப்பட்டு, மற்றவர்களை தேவனுடைய ஐக்கியத்துக்குள்ளாக கொண்டுவருவதும், விசுவாச வாழ்வில் நாம் வளர்ந்து, மற்றவர்களையும் விசுவாச வாழ்வில் வளர்வதற்கு வேண்டிய உதவிகளை செய்வதற்குமே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

"ஜீவ அப்பம்'' (மார்ச் 2016) மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக,  விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.

எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( மார்ச்  2016) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

நண்பனா? எதிரியா?




பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப் படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே’’ (எபி 12:4).
பாவத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. பாவம் செய்கிறவனாக இருந்தால் அவன் கிறிஸ்தவன் இல்லை. கிறிஸ்தவனாக இருந்தால் அவன் பாவம் செய்வது இல்லை.
பாவத்தை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் முதலாவது பாவத்தை எதிரியாகப் பார்க்க வேண்டும், பாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்பவர்கள் பாவத்தை வெறுக்க வேண்டும்.
பாவத்திற்கு நண்பனாக இருந்து கொண்டு, பாவத்தை ஜெயிக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எல்லாம் வெறும் மாய்மாலங்களாகவே இருக்கும்.
பாவத்தை வெறுக்காமல் பரிசுத்த வாழ்வை விரும்புவது எவ்விதம் சாத்தியமாகும். பரிசுத்த வாழ்வை விரும்புகிறவர்கள் பாவத்தை வெறுக்க வேண்டும். பாவத்துடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்து பாவத்தின் அடிமைத்தனத்தில் இருக்கும் மனிதனை விடுவித்து, பரிசுத்தமாக்குகிறார். அனுதினமும் பாவத்தை ஜெயிக்க பெலன் தருகிறார்.

உன் எல்லையில் சத்துரு இல்லை



தேவனுடைய வாக்குத்தத்த வசனத்தை தியானித்து, தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்.
“யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்’’  (ஆதி 49:8)
நம்மை சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்காத தேவன், சத்துருவை ஜெயிக்கவும், நமக்கு விரோதமாக எழும்பும் சத்துருவை முறியடிக்கும் பெலத்தையும் கொடுப்பேன் என்று வாக்குத்தத்தமாக இந்த வார்த்தைகளை இந்த மாதத்தில் நமக்கு கொடுக்கிறார்.
நமக்கு எதிரிடையாக செயல்படும் சத்துரு, நம்மை பெலவீனப்படுத்தும்படியாகவும், நமது நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் திருடும் படியாகவும் செயல்பட நினைக்கிறான், அது மட்டும் அல்ல, தேவ சமூகத்தில் இருந்து நம்மை பிரிக்கும் படியாகவும், தேவனோடு உள்ள ஐக்கியத்தை உடைக்கும் படியாகவும் தந்திரமாக செயல்படப் பார்க்கிறான்.