Bread of Life Church India

வெற்றி வாழ்வின் துவக்கம்




வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற தலைப்பில் தொடர்ந்து தேவனுடைய வார்த்தையைத் தியானித்து வருகிறோம். இதில் செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ற பகுதியில்

2. பின்பற்றுதலில் உறுதி

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள் (கொலோசெயர் 3:1-4)
மேலான வாழ்க்கை என்றதும், வெற்றி என்றதும் வறுமையை ஜெயித்த, பணம்படைத்தவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும், வசதி வாய்ப்போடு இருப்பவர்களுமே வெற்றிப் பெற்றவர்கள் என்று நினைத்துக்கொள்கின்றோம்.

சுவடுகள் (மூன்று) ஊழியத்தின் ஆரம்பம்


இருபத்து மூன்று வயதே நிரம்பிய வாலிப நாட்கள். ஊழியம் என்றால் என்ன? ஊழியத்தின் தன்மை என்ன என்று எதுவும் தெரியாத நிலையில் ஊழியத்தின் அழைப்பு.
ஆண்டவர் ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார் என்று ஒருவரிடமும் சொல்ல முடியாது. ஏன் என்றால் என்னைச் சுற்றி இருந்த உறவுகளுக்கு ஊழியம் என்றால் என்ன என்று தெரிய வாய்ப்பே இல்லை.
இந்தக் காலத்தில் ஒரு ஊழியக்காரனின் மகன் ஊழியத்திற்கு வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிது. அல்லது ஊழிய பிண்ணனி கொண்ட குடும்பத்தில் பிறந்து, ஊழியத்தில் வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிது. அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை என்றாலும், நல்ல வசதி வாய்ப்புடன், பெயர் புகழுடன் செல்வாக்காய் இருந்தால் ஒருவேளை ஊழியத்தில் வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிதாக இருக்கலாம்.
ஆனால் இவைகள் எதுவும் இல்லாமல், ஆண்டவரின் அழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு, இந்தக் காலக் கட்டத்தில் ஊழியத்திற்கு வருவது சவாலாகும். இந்தச் சவாலை மனதுக்குள்ளாக ஏற்றுக்கொண்டே இந்த ஊழிய பயணத்தைத் தொடர ஆரம்பித்தேன்.

"ஜீவ அப்பம்'' (செப்டம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 


எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத  (செப்டம்பர் 2014) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன  எழுதப்பட்டிருக்கும்  தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

எந்த நாள்...ஓய்வு நாள் ?

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்’’ (ஆதி 2:2,3) என்றும் ஆறு நாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் (யாத் 31:17) என்றும் வேதாகமத்தில் வாசிக்கிறோம்.