Bread of Life Church India

கொடுங்கள், கொடுக்கப்படும்

ஒரு மனிதன் வெகு தொலைவில் இருந்து நடந்து வருகையில் பாலைவனப் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது, தான் கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து போன படியால் மிகுந்த தாகத்துடன் நாவு வரண்டு, தண்ணீர் கிடைக்காதா? என்ற ஏக்கத்துடன் சென்று கொண்டிருந்தார்.

    ஆனால் கண்களுக்கு எட்டிய தூரம்வரை தண்ணீர் கிடைப்பதற்குண்டான அறி குறிகளே தென்படவில்லை. மிகுந்த சோர்வுடன் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். மனதில் இருந்த வலிமை, அவருடைய சரீரத்தில் இல்லை, கால்கள் தள்ளாட ஆரம்பித்தது, முன்னோக்கி நடந்தாலும் நடையின் வேகம் குறைந்து, பின்னோக்கி நடப்பது போல அவருக்கு தெரிந்தது.
    இருந்தாலும் வேறு வழியின்றி பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருந்தார். சிறிது தூரம் சென்றதும், தூரத்தில் அவருடைய கண்களுக்கு தண்ணீர் குழாய் ஒன்று தென்பட்டது. அப்பொழுதுதான் அந்த மனிதரின்
சோர்வான முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டதுமுன்பைவிட சற்று வேகமாகவேஅவருடைய
நடைகாணப்பட்டது வெகு நேரமாக எதிர்பார்த்தது கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியினால்தான்.
    ஒரு வழியாக தண்ணீர் குழாயின் அருகில் வந்து, ஆவலோடு குழாயை அடித்தால் தண்ணீர் வரவில்லை காற்றுமட்டுமே வருகிறது. ஏனென்றால் தண்ணீர் கீழே இறங்கி இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தவருக்கு சற்று நிம்மதி வந்தது. அந்த குழாயின் அருகிலேயே ஒரு தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிறைத்து இருந்தது. அந்த தண்ணீரை குடிக்கலாம் என்று எடுத்தவருக்கு மேலும் அதிர்ச்சி. என்ன காரணம் என்றால் அந்த பாட்டிலில் ``இந்த தண்ணீரை எடுப்பவர்கள் இதை குடிக்க வேண்டாம், அருகில் இருக்கும் குழாயில் ஊற்றி, குழாயை அடித்தால் தண்ணீர் வரும். அப்பொழுது உங்களுக்கு வேண்டிய தண்ணீரை குடித்துவிட்டு போதுமான அளவு நீங்கள் எடுத்துக்கொண்டு, மீண்டும் இந்த பாட்டிலில் தண்ணீரை நிறைத்து வைத்துவிடுங்கள். உங்களைப்போல இவ்வழியாக வருபவர்களுக்கு இது பயன்படும்'' என்று எழுதப்பட்டிருந்தது.
    அதைப்படித்ததும் அந்த மனிதருக்கு சோர்வோடுகூட குழப்பமும் வந்துவிட்டது. ``என்னுடைய கரத்தில் இருக்கும் தண்ணீரோ எனது தாகத்திற்கு போதுமானது அல்ல, இருந்தாலும் கிடைத்தவரைக்கும் சந்தோஷம் என்று குடிக்கலாம் என்றாலும் இதில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் என்னை தடுக்கிறது. இதில் எழுதப்பட்டிருப்பது போல் இந்த குழாயில் தண்ணீரை ஊற்றி அடிக்கும் போது ஒரு வேளை தண்ணீர் வராமல் போய்விட்டால் நம்முடைய நிலை மேலும் திண்டாட்டமாகிவிடும்.  இதற்கு மேலும் தண்ணீர் குடிக்காமல் நடப்பதற்கு உடம்பில் பெலன் இல்லை, இருக்கும் இந்த தண்ணீரை
குடித்தாலாவது கொஞ்சம் களைப்பு நீங்கி, தொடர்ந்து பயணம் செய்யலாம் என்ன செய்வது.'' என்று மிகுந்த யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்குவந்து, `` இந்த தண்ணீர் கூட இன்னொருவர் நமக்காக நிரப்பி வைத்ததுதானே, அது போல நாமும் ஏன் செய்யக்கூடாது'' என்று சொல்லிக்கொண்டு, தெளிவோடு கூட குழாயில் தண்ணீரை ஊற்றி அடிக்க ஆரம்பித்தார். சற்று நேரம் அடித்தவுடன் குழாயில் இருந்து தண்ணீர்வர ஆரம்பித்து விட்டது. அப்பொழுது மிகுந்த சந்தோஷத்துடன்
தனக்கு வேண்டிய மட்டும் தண்ணீர் குடித்துவிட்டு, தேவையான அளவு எடுத்துக்கொண்டு, முன்பு இருந்தது போல அந்த பாட்டிலிலும் தண்ணீரை
நிறைத்து வைத்து விட்டு, தனது பயணத்தை களைப்பு நீங்க தொடர ஆரம்பித்தார்.
    ``கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.''
          <லூக்கா 6:38>

0 comments:

Post a Comment