Bread of Life Church India

சரியான முறைமைகள் தானா?


இக்கால ஆராதனை முறைமைகள் எதைபார்த்து செய்யப்படுகிறது, இதற்கு முன்மாதிரி யார்? பரவசபட வைக்க வேண்டும், வாலிபர்கள் கவர்ந்திழுக்கப்பட வேண்டும் , ஆராதனைகள் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று, ஆராதனை விழாக்கள், ஆராதனை பெருவிழாக்கள் பெருகிவருகிறது,

ஆராதனை நடத்தும் ஆராதனை வீரர்கள் கையில் பைபிள் எடுத்துக்கொள்கிறார்களோ இல்லையோ, ஆனால் மேடையில் ஏறும் போதே கைக்குட்டையை கையில் எடுத்து கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல ஆராதனைவேளையில் கைக்குட்டையை எடுத்து எல்லோரையும் சுற்றச்சொல்லுவதும்,நல்லா டான்ஸ் ஆட சொல்வதும், தற்கால நவீன முறையாகிவிட்டது, இதைக்கேட்டவுடன் உடனே  வாலிபர்கள், முதியவர்கள் என்று பாகுபடில்லாமல், எல்லோரும் கைக்குட்டையை எடுத்து சுற்றுகிறார்கள், ஆடுகிறார்கள்,

அது மட்டுமல்ல,
ஒரு இடத்தில் நான் பார்க்கும்போது,ஒரு பிரபலமான ஆராதனை வீரன் என்று அழைக்கப்பட்டவர் இப்படியாக கைக்குட்டையை எடுத்து சுற்ற சொன்னார், சொன்னவுடன், எல்லோரும் கைக்குட்டையை தலைக்கு மேலே சுற்ற ஆரம்பித்து விட்டனர். சில இளம் பெண்கள்  தாங்கள் அணிந்திருக்கும் துப்பட்டாவை எடுத்து சுற்றினார்கள், சில தாய்மார்கள் தங்கள் புடவையின் முந்தானையை சுற்றினார்கள், இதை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு தலை சுற்றுவது போல் ஆகிவிட்டது, என்னங்க இதெல்லாம்?. நாம எங்க போய்கொண்டு இருக்கிறோம், எனக்கு ஒன்றுமே புரிய வில்லை இப்படியெல்லாம் ஆராதிக்க பைபிள் கற்று கொடுக்கிறதா? நான் வைத்துள்ள வேதாகமத்தில் இப்படி இருப்பது போல் தெரியவில்லையே, ஆனால் மூத்த ஊழியர்கள், பிரபல ஊழியர்கள் இதையும் அங்கிகரிப்பதுதான் இன்னும் புரிய வில்லை, இந்த பதிவு யாரையும் குற்றப்படுத்துவதோ, குற்றம் பிடிக்கவோ அல்ல, என்னுடைய மனதின் ஆதங்கம். இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைத்ததின் விளைவுதான் இந்த பதிவு. நண்பர்களே ஜெபிப்போம் நம்முடைய தலைமுறை கிறிஸ்தவத்தின் அடிச்சுவட்டைமாற்றி, பின்வரும் சந்ததிக்கு தவறான முன்மாதிரியை வைத்து செல்வதற்கு காரணமாக இருக்க  வேண்டாம். இப்படி ஆராதனை நடத்தும் அன்பு போதகர்களே சிந்தியுங்கள்! பரவசமெல்லாம் பரிசுத்தமல்ல, இப்படி ஆராதனை பண்ணிணால்தான் வாலிபர்களை கொண்டுவர முடியுமென்று பதில் சொல்லாதிங்க, இப்படிபட்ட ஆராதனைகளைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள் என்றும் தயவு செய்து பதில் சொல்லாதிங்க ஆராதனைக்குண்டான முறைமைகளை மாற்றி, தனித்துவமான பெயர் பெற வேண்டுமா? இதற்க்கெல்லாம் தேவன் மௌனமாக இருக்கிறார் என்றால் நீங்கள் இப்படியெல்லாம் செய்வதை அங்கிகரிக்கிறார் என்பது பொருள் அல்ல, அது மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆராதனையில்தான் அதிகமான நபர்கள் கூட்டமாக வருகிறார்கள் எனபதும், நீங்கள் நடத்தும் ஆராதனைமுறை, சரியானதுதான்  என்பதும் அர்த்தமல்ல.

இப்படியெல்லாம் சொல்லுவதால் இவன் பெந்தெகொஸ்தே உபதேசத்திற்கு மாற்றானவன் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம், நான் கத்தோலிக்கத்திலிருந்து பெந்தெகொஸ்தே அனுபவத்தை சரியாக அறிந்து, அதன்படி மாறியவன்.

ஆராதனை வேண்டும், இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கவே நாம் தெரிந்து கொள்ளப்பட்டு, அழைக்கப்ட்டுள்ளோம். ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க வேண்டும்.

ஆகவே நாம் ஆடிபாடி ஆராதிக்க, தாவீதை முன் வைத்து ஆராதிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளுகிறோம், ஆனால் தாவீது வெறும் பரவசத்துக்காக ஆட வில்லை, என்பதை கவனித்து பார்க்க வேண்டும்,

அது மட்டுமல்ல இக்கால ஆராதனையின் பொருளும் மாற்றப்பட்டுள்ளது, எப்படியென்றால், ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே நாம் ஆராதிக்கிறோம், ஜனங்களை அப்படியே ஆராதனைக்குள்ளாக நடத்துகிறோம். எப்படி எதிர்பார்க்கிறோம், நீங்கள் ஆராதியுங்கள் ஆண்டவர் உங்களுக்கு அதை செய்வார், இதை செய்வார் என்று ஒரு விதமான எதிர்பார்ப்பையை ஜனங்களுக்குள் ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.

ஆனால் ஆராதனையென்பது எதையோ எதிர்பார்த்து அல்ல, எதையும் எதிர்பார்க்காமல் முழு அர்பணிப்போடு நம்மை தேவனுக்கு அர்பணிப்பதாகும்.  ஆகவே, பயபக்தியோடும் நல் அர்பணிப்போடும் ஆராதிப்போம், இந்த முறைமைக்கு உட்பட்டு ஜனங்களை ஆராதனைக்குள்ளாக நடத்துவோம். கர்த்தர் நம்மை வழி நடத்துவாராக.

0 comments:

Post a Comment