Bread of Life Church India

சிலுவையில்லா இயேசு !!





சிலுவையில்லா இயேசு எல்லோருக்கும் பிடிக்கும் ,சிலுவையோடு, பாவியை மீட்க வந்த இயேசுவை ஏற்பது என்பது எல்லோருக்கும் சற்று கடினமான ஒன்றுதான்.


பரிசுத்த வேதாகமம் கூருகிறது, "பாவிகளைமீட்க கிறிஸ்து இயேசு வந்தார்''

இயேசு கிறிஸ்து ஞான குருவாக இப்பூமிக்கு வரவில்லை, உலக இரட்சகராக இப்பூமிக்கு வந்தார்.


ஒரு கதை ஒன்று இப்படியாக உள்ளது "நான்கு குருடர்கள் யானையை தடவி பார்த்தார்களாம், ஒருவன் வாலை பிடித்துக்கொண்டு சொன்னானாம் யானை கயிறு போல் உள்ளது என்று, மற்றொருவன் காதை பிடித்துக்கொண்டு முறம் என்று சொன்னானாம் இப்படி நான்கு பேரும் ஒவ்வொன்றை பிடித்துக்கொண்டு ஒவ்வொருவிதமாக கூறினார்களாம், ஒருவனுக்கும் யானையின் முழு உருவம் தெரியவில்லை.



அது போல இயேசு கிறிஸ்துவை முழுமையாக அறிந்து கொள்ளாமல், தாங்கள் அறிந்தவற்றையும்,தங்களுக்கு தெரிந்தவற்றையும் மட்டும் கூறி, இயேசு கிறிஸ்துவின் வல்லமையை குறைத்துக் கூறிக்கொண்டிருக்கின்றனர்.


இயேசு கிறிஸ்து இம்மைக்குறியதை மட்டும் பேச வில்லை, ஒருவரும் ஒருக்காலும் அறியாததும் மனித சிந்தைக்கு எட்டாததுமான பெரிய காரியங்களையும் பரலோகத்தையும், மனிதனின் மரணத்துக்கு பின்னுள்ள மறு வாழ்வையும் குறித்து பேசினது மாத்திரமல்ல, மரித்து உயிரோடு எழுந்து, மரித்தவரின் உயிர்தெழுதல் உண்டு என்று நிருபித்து காண்பித்திருக்கிறார்.


உண்மையாக கிறிஸ்துவை பின்பற்றுகிற ஒருவன் இவைகளை விசுவாசிக்க வேண்டும், கிறிஸ்தவத்தின் அடிப்படை உயிர் மூச்சே இதில்தான் அடங்கியுள்ளது. உலக தத்துவங்களும் ஒவ்வொரு மத தத்துவங்களும் ஒவ்வொருவிதமாக கூறினாலும் இதுவே உண்மை.


இயேசு கிறிஸ்துவை மாமனிதராக, புரட்சிமிக்க கருத்துகளை கூறினவராக, ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்வதொன்றும் பெரிய காரியமல்ல அவர் மட்டுமே கடவுள், அவர் பூமியில் வாழ்ந்த அந்த நாட்களிலும் கூட அனேகர் அவரை, போதகராக ஏற்றுக்கொள்ள தயங்க வில்லை, அவரே மீட்பர் மேசியா என்பதை ஏற்கத்தான் மறுத்தனர்.


அப்பொழுதெல்லாம் அவர் கூறியது, "நான் ஆபிரகாமுக்கு முன்னமே இருக்கிறேன், தாவீதுக்கு முன்னமே இருக்கிறேன்'' என்று, அப்பொழுது அவர் சொல்லுகிற அந்த நாட்களிலிருந்து பார்த்தால் தாவீது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர், ஆபிரகாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இன்னோரு இடத்தில் "நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்'' என்று கூருகிறார். காரணம் என்ன, நான் எப்போதும் இருக்கிறேன் என்று அர்த்தம்.


கிறிஸ்தவர்கள் இம்மைக்குரியதை மட்டும் தேடுகிறவர்கள் அல்ல, தங்களுடைய ஆத்துமா ஈடேர, பாவத்திலிருந்து மீட்கப்பட்டு தேவனுடைய பிள்ளை என்ற அதிகாரத்தை பெற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்தவம் என்பது மதமாக அல்ல கிறிஸ்துவால் மீட்கப்பட்டு அவறை பின்பற்றும் கூட்டமாக உள்ளது, அது மாத்திரமல்ல சபை என்பது கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது.


2 comments:

  1. சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதும் "பிதாவே! இவர்களை மன்னியும். தான் என்ன செய்கிறோம் என்றறியாதிருக்கிறார்கள்" என்று மன்றாடும் ஒரு நல்லவரை கடவுளாக ஏற்றுக் கொள்வதில் இந்து மதத்திற்கு எந்த இடர்பாடும் இருக்காது. நீங்கள் ஒவ்வொரு இந்து வீடாகச் சென்று பாருங்கள். எத்தனை வீடுகளில் இயேசு படம் இருக்கிறதென்று. இயேசு எங்களை மதம் மாறச் சொல்லவில்லை. அவர் அப்படி நினைத்திருந்தால் எப்போதோ எங்களை மாற்றியிருப்பார். "நீ நன்றாயிருக்கிறாய் மகனே! உலகத்திற்கு வழிகாட்டு" என்றுதான் ஒரு இந்துவிடம் இயேசு சொல்வார் என்று நான் நினைக்கிறேன்.
    அதுக்கு நான் கிறிஸ்தவனாக வேண்டிய அவசியமே இல்லையே.
    நான் இயேசுவை ஏற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. .................இயேசுவும் மதம் மாற சொல்லவில்லை, நாங்களும் மதம் மாற சொல்ல வில்லை, நீங்க ஏன் கிறிஸ்தவத்தை மதமாக பார்க்க வேண்டும், கிறிஸ்தவம் மதமே இல்லை.

      மேலும் வாசிக்க.....

      http://www.jeevaappam.in/2012/07/blog-post_9816.html

      Delete